கொவிட் 19 தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்றைய தினம் கண்டறியபட்டுள்ளது .
இதனடிப்படையில் மானிப்பாய் காவல்நிலைய உத்தியோகத்தர்கள் ஆறு பேரும் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களிற்கு அமைய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் உள்ள சந்தேக நபர்கள் எவரும் நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லப்படவில்லை.
மேலும் கைதுசெய்யப்படட குறித்த நபர் கடந்த 11 ஆம் திகதி சங்குவேலியில் வைத்து மானிப்பாய் காவற்துறையினரால் கைது செய்யப்பட்ட அவர் 12ஆம் திகதி தொடக்கம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது .