யாழ் மாவட்டத்தில் கொவிட் 19 தொற்று அதிகரித்ததன் காரணத்தினால் யாழ். வலய பாடசாலைகள் ஒரு வார காலத்திற்கு முடக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இரண்டு பாடசாலைகளில் மாத்திரம் பரீட்சை நடந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டதை தொடர்ந்து இணையவழி மூலம் குறித்த பரீட்சைகளை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த விடயம் குறித்து யாழ்.வலய கல்வி பணிப்பாளர் பொ.ரவீந்திரன் தெரிவித்துள்ளதாவது, நேற்றைய தினம் யாழ்.வலயப் பாடசாலைகள் சிலவற்றில் தொண்டமானாறு வெளிக்கள நிலைய பரீட்சைகள் இடம்பெற்றமை தொடர்பில் மேல் மட்டங்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
இதனைத் தொடர்ந்தே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுளள்து.
மேலும் ஐந்து நாட்களுக்கு இடம்பெறும் பரீட்சைகள் அந்தந்த பாடசாலைகளின் Viber, மற்றும் zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நடாத்துமாறு பாடசாலைகளின் அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.