T24 Tamil Media
இலங்கை

யாழ். அராலித்துறை மக்கள் எதிர்ப்பு நடவடிக்கை

யாழ்ப்பாணம் அராலித்துறையிலுள்ள இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கு பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

யாழ். அராலி துறையில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இன்றையதினம் தொடக்கம் குறித்த இராணுவ முகாம் தவிர்ந்த வெளியாட்கள் தொடர்ச்சியாக அங்கு அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அயல்கிராமமக்கள் இன்று காலை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது, இராணுவ முகாமில் கொரோனா நோய்த்தொற்றுள்ள சந்தேக நபர்களை தனிமைப்படுத்தினால் அது தமக்கு ஆபத்தானதாக அமையும் எனவும் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும் கவலை வெளியிட்டுள்ளனர்.

அருகிலுள்ள தாம் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் என்றும், மீன்பிடித்தொழில் மேற்கொள்வது சிக்கலானதாக மாறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் தமக்கும் ராணுவத்துக்கும் பாதிப்பில்லாத பொருத்தமான இடத்தில் இத்தகைய தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்குமாறும் மக்கள் செறிவாக வாழ்கின்ற இந்தப் பகுதியில் இராணுவத்தின் முகாமில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்றும் மக்கள் மேலும் தெரிவித்தனர்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more