T24 Tamil Media
இலங்கை

யாழ்ப்பாணத்தின் தீவுகளை மொத்தமாக அள்ளுகிறது இந்தியா

கொழும்பு துறைமுகத்தில் மேற்கு கொள்கலன் முனையம் திட்டத்தையும், யாழ்ப்பாணத்தின் மூன்று தீகளில் அமைக்கப்படவுள்ள மின் திட்டங்களையும் இந்தியா கைப்பற்றியுள்ளது.

கிழக்கு முனையத்தை இந்தியா இழந்த போதும், குறிப்பிடத்தக்க இரண்டு திட்டங்களில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.

கிழக்கு கொள்கலன் முனைய விவகாரத்தினால் அதிருப்தியும், அதிக எச்சரிக்கையுணர்வையுமடைந்த இந்தியா, அதிக அழுத்தங்களை பிரயோகித்து இரண்டு திட்டங்களையும் கைப்பற்றியுள்ளது.

யாழ்ப்பாணத்தின் சப்த தீவுகளில் நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு ஆகிய தீவுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை மேற்கொள்ள, சீனாவின் எம்.எஸ் / சினோசர்-எடெக்வினுக்கு வழங்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்திருந்தது.யாழ்ப்பாணத்திற்கு வெளியே மூன்று தீவுகளில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட இருந்தன. சூரிய, காற்று மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க கலவையை இந்த ஆலைகள் பயன்படுத்த வேண்டும்.

இந்த திட்டத்திற்காக 12 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்க இருந்தது.

இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் தீவுகளின் இருப்பிடங்களில் ஒன்று ராமேஸ்வரத்திலிருந்து 48 கி.மீ தூரத்தில் இருப்பதால் இந்த திட்டத்தை ஒரு சீன நிறுவனத்திற்கு வழங்குவதை இந்தியா கடுமையாக எதிர்த்தது, அங்கிருந்து சீனர்கள் இந்தியாவை உளவு பார்ப்பார்கள் என்று இந்தியா அஞ்சியது.

இந்த திட்டத்திற்காக டெண்டர் வழங்கிய இந்திய நிறுவனத்தை விட சீன நிறுவனம் சிறந்த தகுதி வாய்ந்தது என்றும், ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த ஒப்பந்தத்தை அனுமதித்து என்றும் இலங்கை அரசு குறிப்பிட்டது. எனினும், இந்த கருத்துக்களை ஏற்றுக்கொள்ள இந்தியா தயாராக இருக்கவில்லை.இந்தியாவின் ஆட்சேபனை இலங்கையின் இறையாண்மையையும் சுதந்திரத்தையும் பாதிப்பதாக ஆளுந்தரப்பின் ஒரு தரப்பினர் அழுத்தங்கொடுத்தனர்.

எனினும், பாகிஸ்தான் பிரதமரின் வருகை, சீனாவின் அதிகரித்த பிரசன்ன விவகாரங்கள் என அதிகரித்து வரும் இந்திய அதிருப்தியையடுத்து, இந்தியாவின் கோரிக்கைக்கு இலங்கை பணிந்துள்ளது.

இதேவேளை, கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவதில்லையென அரசு எடுத்த முடிவையடுத்து, மேற்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. எது எப்படியிருந்தாலும் தமிழ் மக்களின் நிலவரமானது வீதிப்போராட்டங்களுடனும் உண்ணாவிரத மேடைகளுடனும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவர்களுக்கு மேலும் தலையிடியை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான அரசின் செயற்பாடுகள் அமைந்திருக்கிறது. மொத்தத்தில் விற்கப்படும் நிலங்கள் வளங்கள் தொடக்கம் கொரோனா தொற்றாளர்கள் தங்கவைக்கப்படும் முகாம்கள் வரை அனைத்தையும் செய்வதற்கு ஸ்ரீலங்கா அரசின் கண்களில் தென்படுவது தமிழர் நிலங்கள் மாத்திரமே என்பது இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டிய முக்கிய அம்சமாகும்.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more