யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று (11) காலை முதல் இன்று (12) காலை வரை 149.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று திருநெல்வேலி வானிலை ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்தார்.
யாழ் நகரப் பகுதியிலேயே அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் 24 மணித்தியாலத்திற்கு இந்த மழையுடன் கூடிய காலநிலை தொடரும் வடபகுதியில்100மில்லி மீற்றர் எதிர்பார்க்கப்படுகிறது.