யாழ் மாவட்டம் பருத்தித்துறை திக்கம் சந்திக்கு அண்மையில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி கடலுக்குள் பாய்ந்ததில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை காவற்துறையினர் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்தியதன் பின்னர் குறிப்பிட்டுள்ளனர் .
அத்துடன் குறித்த சம்பவத்தில் கற்கோவளத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பவிதரன் என்ற குடும்பத்தலைவரே உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் குறித்த வீதியூடாகப் இன்று காலை பயணித்தவர்கள் பருத்தித்துறை காவற்துறையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்று காவற்துறையினர் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர் .