யாழ்ப்பாணம் புறநகர் பகுதியொன்றில் நேற்று (31/12/20) இந்த சம்பவம் நடை பெற்றுள்ளது இதனை அடுத்து 24 வயதான யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமணத்திற்கு முன்னரான உறவின் மூலம் கர்ப்பிணியான யுவதி, உயிரிழந்த நிலையில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் . குழந்தையை வீட்டு வளவிலேயே புதைத்துள்ளார் .
அதிக இரத்த போக்கு காரணமாக யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதால் யுவதி குழந்தை பிரசவித்த தகவல் கிடைக்கப்பெற்றது .
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நேற்று மாலை சிசுவின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது .