யாழ்ப்பாணத்தில் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளபோதிலும் பொதுப் போக்குவரத்து தொடர்பாக மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொள்வதாக பொதுமக்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
குறிப்பாக தூர இடங்களுக்கான பேருந்து சேவைகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் பேருந்து சேவையின்மையால் பாதிக்கப்படுவதாகவும் தமது பிரச்சினைக்கு உரிய அதிகாரிகள் உடனடியாக தீர்வு பெற்றுத்தருமாறும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
நாடு முழுதும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்குச் சட்டம் மற்றும் ஏனைய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது பகுதிநேரம் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில் தொழில் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மக்கள் தொழில் நடவடிக்கையை முன்னெடுப்பதில் போக்குவரத்துச் சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.