T24 Tamil Media
இலங்கை

யாழில் தொடரும் கொரோனா பரிசோதனைகள்.

வடமாகாணத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளவர்களுக்கும் அத்தியாவசிய சேவைகளுக்காக வெளிமாவட்டங்களுக்குச் சென்று வருகை தருபவர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் இன்றைய தினம் தெரிவித்தார்.

இதுவரை நாட்களும் வடக்கு மாகாணத்தில் 346 பேருக்கு கொரோனா தொற்றுத் தொடர்பான பரிசோனைகள் நிறைவுபெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சுகாதார அமைச்சின் அலுவலத்தில் இன்றைய இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், “சமூக மட்டத்தில் கொரோனா பரம்பல் இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக கொரோனா தொற்றுக்கான பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தோம்.

இதனடிப்படையில் அரியாலை ஆராதனையில் கலந்துகொண்ட 346 பேரை அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்கள் அனைவருக்குமான பரிசோதனைகளும் நிறைவு பெற்றுள்ளன.

குறித்த நபர்களில் 20 பேரை காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் மையத்தில் அனுமதித்திருந்தோம். அவர்களில் 16 பேருக்குத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய 4 பேருக்கு மூன்றாவது தடவையாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.

அத்துடன் குறித்த 20 பேருக்கும் உணவு பரிமாறிய நான்கு இராணுவத்தினருக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைவிட யாழ்.மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் 26 பேருக்கு இரண்டு தடவைகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர்களுக்கு தொற்றுஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ், 23 பேருக்கு பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆராதனையில் கலந்துகொண்ட அத்தனை பேருக்கும் பரிசோதனைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்டத்தில் முதலாவது தொற்றாளரான தாவடியைச் சேர்ந்த நபருக்கும் அவருடன் நெருங்கிய தொடர்புடைய மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 18 பேருக்கும் இரண்டு தடவைகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு தொற்று ஏற்படவில்லையென அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்தக் கட்டமாக வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்களுக்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதுமட்டுமன்றி கொழும்பு மாவட்டத்தில் இருந்து அத்தியாவசிய தேவைகள் மற்றும் ஏனைய தேவைகளுக்காக சென்றுவரும் பாரவூர்திகளின் சாரதிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் ஒவ்வொரு மாட்டங்களிலும் பரிசோதனைகள் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுவரைக்கும், 411 பேருக்கு சமூக மட்டத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றில் 11 பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனையவர்களுக்கு தொற்று இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more