யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வீடொன்று தீபற்றியதால், பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
குருநகர் கொண்டடி வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலேயே இன்று தீ பற்றியுள்ளது. குறித்த தீீீீீீயினை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
குறித்த வீட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரும் தாயார் ஒருவரும் வசித்து வருகின்றனர்.
ஒரு சகோதரி அந்த வீட்டிற்கு வந்து செல்கின்றதாகவும், குடும்பத்தில் தினமும் சண்டைகள் நடப்பதாகவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில், குடும்ப தகராறின் காரணமாக, வீட்டிற்கு தீ வைத்திருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அப்பகுதி கிராம சேவையாளர் சென்று பார்வையிட்டதுடன், தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வரை, அங்கு கடமையில் நின்றார்.
அதேவேளை, அயலவர்கள் இணைந்து, தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த நிலையில் அந்த வீட்டின் உரிமையாளர்கள் அங்கு நிற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.