T24 Tamil Media
இலங்கை

யாழில் இன்று 16 பேருக்கு கொரோனா பரிசோதனை

யாழ்ப்பாணத்தில் இன்று 16 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

யாழ். சண்டிலிப்பாய் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட 15 பேருக்கும், காரைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 16 பேருக்கு மானிப்பாய் பிரதேச சபையின் கலாச்சார மண்டபத்தில் இன்று கொரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 15ம் திகதி யாழ். அரியாலை தேவாலயத்தில் சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகர் நடாத்திய ஆராதனையில் கலந்து கொண்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது கண்காணிக்கப்பட்டுவரும் 16 பேருக்கே இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதற்காக மானிப்பாய் பிரதேச சபை கலாச்சார மண்டபம் தொற்று நீக்கம் செய்யப்பட்டு சந்தேகநபர்கள் அழைத்து வரப்பட்டு உரிய இடைவெளியில் அமர்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனையின் பின்னர் அம்புலன்ஸ் மூலம் சந்தேகநபர்கள் அவர்களது இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், கலாச்சார மண்டபம் மற்றும் பயன்படுத்தப்பட்ட தளபாடங்கள் தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

மேலும் கலாச்சார மண்டபத்தை 2 நாட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு மண்டபம் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more