யாழ்ப்பாணம் கே.கே.பி. இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் தற்போது நிலவுகின்ற இரத்த தேவையைக் கருத்திற்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரிக்கு முன்பாக அமைந்துள்ள லொயலாஸ் மண்டபத்தில் இரத்த தான முகாம் இடம்பெறவுள்ளது.
இந்த இரத்த தான முகாமில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் பங்குபற்ற முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் இரத்த தானம் செய்பவர்கள் இயல்பாகவே வருகைதர முடியும் என அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை தூர இடங்களில் இருப்போர் மற்றும் போக்குவரத்து வசதிகளற்ற நிலையில் இரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் 0776616484 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு போக்குவரத்து வசதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.