யாழ்.சாவகச்சேரி பகுதியில் கூட்டுறவு பணியாளர் ஒருவர் ஊரடங்கு நேரத்தில் நடமாடுவதற்கான அனுமதி பத்திரம் வைத்திருந்தபோதும் காவற்துறையினர் அவரை கைது செய்து 45 நிமிடங்கள் காவல் நிலையத்தில் தடுத்து வைத்திருந்து விடுதலை செய்துள்ளனர்.
குறித்த பணியாளர் ஊரடங்கு அனுமதிப்பத்திரம் வைத்திருந்தும் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கூட்டுறவு பணிப்பாளருக்கு அறிவித்து பணிப்பாளர் காவல் அதிகாரியுடன் தொடர்பு கொண்டதும் பணியாளர் விடுவிக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பணியாளருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது சாவகச்சேரியிலுள்ள வங்கி ஒன்றிற்கு அலுவலக நிமிர்த்தம் சென்ற போது அங்கு நின்ற மக்கள் எல்லோரையும் ஊடரங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது நின்றதாக தெரிவித்து காவற்துறையினர் கைது செய்து பஸ் ஒன்றில் ஏற்றியுள்ளனர்.
தன்னையும் கைது செய்ய முற்பட்ட போது தான் அனுமதி பத்திரத்தை காண்பித்த போதும் அதனை கண்டு கொள்ளாமல் காவற்துறையினர் தன்னையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் உடனடியாக பணிப்பாளருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் பணிப்பாளர் காவல் மேலதிகாரியுடன் தொடர்பு கொண்டதும் தான் விடுவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
காவற்துறையினரின் இந்த நடவடிக்கையால் தன்னால் தொடர்ந்து பணியாற்ற முடியுமா என்ற கேள்வி எழுவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.