T24 Tamil Media
இலங்கை

யாழிலுள்ள சந்தைகளில் தனிநபர் சுகாதாரம் பேணப்படுகின்றது – அரச அதிபர்.

யாழ். மாவட்டத்திலுள்ள சந்தைகளில் தனிநபர் சுகாதாரம் பேணப்படுவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நீண்ட நாட்களின் பின்னர் பொதுச் சந்தைகள் இயங்க ஆரம்பித்துள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ள பொதுச்சந்தைகள் தனிநபர் சுகாதாரங்களை பேணுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

நெல்லியடிசந்தை மட்டும் சுகாதார ஏற்பாடுகளை பூரணப்படுத்திய பின்னர் மீண்டும் திறக்கப்படும்.

யாழ்ப்பாணத்தில் 70 நாட்களின் பின்னர் மீண்டும் பொதுச் சந்தைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. பொதுச் சந்தைகள் மீள திறக்கப்பட்டு வழமையான வியாபார செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

கொரோனா வைரஸ் தாக்கத்தினை நாட்டில் கட்டுப்படுத்தும் முகமாக ஊரடங்குச் சட்டம் நாடுபூராகவும் அமுல்ப்படுத்தப்பட்டதன் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பொதுச்சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.

நீண்ட நாட்களின் பின்னர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பொதுச் சந்தைகள் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன இவ்வாறான நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் திருநெல்வேலிச்சந்தை, சுன்னாகம் பொதுச்சந்தை போன்ற பிரதான பொதுச் சந்தைகள் தனிநபர் சுகாதாரங்களை முறைமையாகப் பேணி சிறப்பாக நடைபெற்று வருகின்றமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

எனினும் மருதனார்மடம் மற்றும் நெல்லியடி பொதுச் சந்தைகள் சுகாதார ஏற்பாடுகள் பூரணமல்லாத நிலைமை பொதுச்சுகாதார பரிசோதகரினால் கண்டறியப்பட்டுள்ளது.

அதில் மருதனார்மடம் பொதுச் சந்தை உடனடியாக சுகாதார நடைமுறை ஏற்பாடுகள் செய்யப்பட்டு தொடர்ந்தும் இயங்கி வருகின்றது.

எனினும் நெல்லியடி பொதுச்சந்தையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவது மந்தமான நிலைகாணப்படுவதால் பிராந்திய சுகாதார திணைக்களத்தின் அறிவறுத்தலுக்கு அமைய தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளது.

எனினும் மிக விரைவில் சுகாதார ஏற்பாடுகளுடன் மக்களுக்கான வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதார திணைக்களம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுச்சந்தைகளுக்கு செல்லும் பொது மக்கள் முகக் கவசங்களை கட்டாயமாக அணிவது அவசியமாகும். மேலும் பொதுச் சந்தை நுழைவாயிலில் அறிவுறுத்தப்படுகின்ற சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் என மேலும் தெரிவித்தார்.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more