ஏ9 வீதி பூனாவ பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று யானைத்தாக்குதலுக்கு உள்ளாகியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
ஏ9 வீதியில் முச்சக்கர வண்டி ஒன்று பயணித்துக்கொண்டிருந்தவேளை பூனாவ பாடசாலைக்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து வீதிக்கு வந்த யானை முச்சக்கர வண்டியைத் தாக்கியுள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த தந்தையும், மகளும் படுகாயமடைந்த நிலையில் மதவாச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புனாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.