தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் திணைக்களத்தின் செயற்பாடுகளை 20 மாவட்டங்களில் மீள ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் திணைக்களத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சேவைகள் எதிர்வரும் வாரம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.