T24 Tamil Media
இலங்கை

மேலும் 2 லட்சம் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா நிவாரணம்!

கம்பஹாவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மேலும் 2 லட்சம் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா நிவாரணம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 1.050 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினாருமான சஹன் பிரதீப்விதான தெரிவித்துள்ளார்

இதேவேளை, கம்பஹாவில் பாதிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா நிதியுதவி வழங்கும் நடவடிக்கைகள் நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் 40 கோடி ரூபா வழங்கப்பட்டிருந்ததாகவும் அந்த நிதியில் 13 கோடியே 90 லட்சம் ரூபா நிதி மக்களுக்கு வழங்கப்பட்டிருந்ததாகவும் கம்பஹா மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் தெரிவித்திருந்தார்.

இதற்கமைய அரச பணியில் இல்லாத அனைத்து குடும்பங்களும் இந்த 5 ஆயிரம் ரூபா நிதி உதவியை பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் பின்னர், அந்தப் பகுதியில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து கம்பஹா மாவட்டத்தின் 19 காவல்துறை அதிகாரப் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

இவ்வாறு ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள பகுதியில் வசிக்கும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 14 ஆம் திகதி கடம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத்தால் நிதியமைச்சில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைவாக இந்த நிவாரணம் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more