யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தமை உலகத்தமிழனத்தை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
உலகெங்கும் இதற்கு எதிராக கண்டனங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில், உடைக்கப்பட்ட தூபியை மீள அமைக்கக்கோரி பல்கலைகழகத்தின் எதிரில், மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
இந்த போராட்டத்தில் இன்று காலை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவன் ஒருவர் கலந்து கொண்டிருந்தார்.
தற்போது, நெல்லியடி, பருத்தித்துறை பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளனர்.