இலங்கையில் மேலும் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் இதுவரை 1814 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
குறித்த நால்வரில் மூவர் ரஷ்யாவிலிருந்து வருகை தந்தவர்கள் எனவும் ஒருவர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில் 891 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 912 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.