இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 639 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை , நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 811 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 11 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 65 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான 817 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.