T24 Tamil Media
இலங்கை

முஸ்லிம் மக்களை ஒதுக்கிவிட முடியாது-கருணா

முஸ்லிம் பயங்கரவாதிகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொண்டார்கள் என்பதற்காக ஒரு சமூகத்தை குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் இன்றைய தினம் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடைபெற்று ஒருவருடம் நேற்றைய தினம் பூர்த்தியடைந்த நிலையில், அம்பாறை, கல்முனையில் அமைந்துள்ள அலுவலகதத்தில் இன்று மதியம் தனது கட்சி ஆதரவாளர்களுடன் பிரார்த்தனையில் ஈடுபட்ட பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும். இதில் நாங்கள் விசாரித்து தீர்ப்பு வரும்வரை எவரையும் குற்றஞ்சாட்ட முடியாது.

அத்துடன், புலனாய்வுத் துறையினரால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணையின் அடிப்படையில் இத்தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இதில் வீணாக ஒரு சமூகத்தைக் குற்றஞ்சாட்டுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.

முஸ்லிம் பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டார்கள் என்பதற்காக நாங்கள் எங்கள் நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களை குற்றஞ்சாட்டுவது நாகரிகமான செயல் அல்ல. அவர்களை ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பது என்பது உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.

விரைவாக இந்த விசாரணைகளை மேற்கொண்டு முஸ்லிம் மக்களிடத்தில் இருக்கின்ற ஐக்கியத்தை நாம் உருவாக்க வேண்டும். மீண்டும் உறவை முஸ்லிம் மக்களுடன் சிறந்த முறையில் கட்டியெழுப்ப வேண்டும் என்பதை நான் கேட்டுக்கொள்கிறேன்.

கடந்தகால அரசாங்கங்கள் உரிய நடைமுறைகளை மேற்கொள்ளாமை காரணமாகத்தான் இந்த தற்கொலைக்குண்டுத்தாக்குதல் நடப்பற்குக் காரணமாக அமைந்தது என்பது நாட்டு மக்கள் அனைவரும் அறிவார்கள்.

இதனால், பல மக்களின் உயிர்கள் இழக்கப்பட்டு ஒரு அமைதியற்ற சூழலில் வாழும் நிலை அனைவருக்கும் இந்த தாக்குதலால் ஏற்பட்டது. ஆகவே உறவை இழந்த சொந்த, உறவுகள் அனைவருக்கும் இந்த இடத்தில் நாங்கள் ஒரு ஆறுதல் கூறி அவர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காக பிரார்த்திக்கின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more