T24 Tamil Media
இலங்கை

முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட நிலையிலும் சாதனை படைக்கும் மாணவிகள்


க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் முல்லைத்தீவு முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவிகளான செல்வி பவதாரணி கெங்காதரன், செல்வி விதுர்சிகா மதியழகன் ஆகியோர் சிறந்த பெறுபேற்றைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

கடந்த 2009 இல் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது, காயமடைந்து முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு இன்று வரை இடுப்புக்கு கீழே இயங்க முடியாது சக்கரநாற்காலியின் உதவியோடு கல்வியை தொடர்ந்துவரும் குறித்த மாணவிகள் இத்தகைய பெறுபேற்றை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இவர்கள், இருவரும் தங்களது ஆறாவது வயதில் எறிகணை தாக்குதலாலும், துப்பாக்கி சூட்டினாலும் காயமடைந்து முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு வடுக்களை சுமந்து, வலிகளை தாண்டி சக்கர நாற்காலியில் பாடசாலை சென்று சாதரண தரப் பரீட்சையில் சாதித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை பகுதியில் வசித்து வருகின்ற செல்வி பவதாரணி கெங்காதரன் என்ற மாணவி இறுதி யுத்தத்தின் போது எறிகணை தாக்குதலில் தனது தந்தையாரை இழந்த நிலையில் அதே சம்பவத்தில் முள்ளந்தண்டில் படுகாயமடைந்து முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாத நிலையில் உடலில் குண்டு சிதைவுகளோடு வாழ்ந்து வருபவர் 8 ஏ, பி சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவரைப்போன்றே, மதியழகன் விதுர்சிகா என்ற மாணவியும் தனது ஆறாவது வயதில் செட்டிகுளம் ஆனந்தகுமாரசுவாமி நலன்புரி நிலையத்தில் பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் தனது அண்ணனோடு சேர்ந்து படுகாயமடைந்து முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 11 ஆண்டுகளாக சக்கர நாற்காலியின் உதவியோடு கல்வி கற்று வந்த நிலையிலும் சிறந்த பெறுபேறாக 6 ஏ தர சித்திகள் டீ, 2 சி தர சித்திகள் என்ற பெறுபேற்றை பெற்று சாதனை படைத்துள்ளார்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more