முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவித்து தனக்காக பாதுகாப்பை அதிகரிக்குமாறு காவல்துறை மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளார்.
குறித்த விடயத்தினை அவர்
காவல்துறை மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதமொன்றில்
தெரிவித்துள்ளார்.
அத்துடன் சமீபத்தில் ஹொரகொல்லையில் உள்ள தனது வீட்டிற்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் அங்கு பலமணிநேரம் சுதந்திரமாக நடமாடி வீட்டில் உள்ள பொருட்களை ஆராய்ந்த சம்பவம் குறித்து முன்னாள் ஜனாதிபதி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர்கள் எந்தவிகமான பொருட்களையும் கொண்டு செலவில்லை இதன் காரணத்தினால் அவர்களின் நோக்கம் திருடுவது இல்லை என சந்தேகம் எழுந்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.