மறைந்த மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி கிளையின் ஏற்பாட்டில் பசுமை பூங்கா வளாகத்தில் நடைபெற்றது.
இணக்கத்தின் குரலாக தனுடைய இறுதிக்கணம் வரை சாட்சியமாய் சத்தியவழியில் பயணித்து மறைந்த ஆண்டகையின் ஆத்ம இளைப்பாற்றுதலுக்கான அஞ்சலிப் பிரார்த்தனையில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சிம்மயா மிசன் சுவாமிகள் பங்கு தந்தையர்கள் மற்றும் மதத்தலைவர்கள் கட்சி ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.