பிலியந்தலாவை காவல்த்துறை பிரிவிற்குட்பட்ட காவல்த்துறை அதிகாரிகள் மூவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறையின் தொற்று நோயியல் தடுப்புப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மீன் வியாபாரி ஒருவரின் வாகனத்தை சோதனைக்கு உட்படுத்தியதன் காரணமாகவே குறித்த மூவரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பிலியந்தலாவை பகுதியில் மீன் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வியாபாரி ஒருவர், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உள்ளதாக நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்டதாக தேசிய தொற்று நோய் பிரிவு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், குறித்த மீன் வியாபாரியுடன் தொடர்புடைகளைப் பேணிய அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதற்கமைய குறித்த காவல்த்துறை அதிகாரிகள் மூவரையும் தமது வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.