கம்பளை விதானலாகே சமந்த குமார எனப்படும் வெலே சுதா போதை பொருள் விற்பனையில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டை எதிர்கொண்டு தற்போது மரணத் தண்டனை அனுபவித்து வரும் நிலையில் அவருக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில் ஹெரோயின் விற்பனையின் மூலம் சம்பாதித்த 17 கோடிக்கும் அதிகமான சொத்தை மோசடி செய்து கையகப்படுத்தியதாக வெலே சுதா மற்றும் அவரது மனைவி அதேபோல் அவரின் உறவினரான பெண் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா பட்டபெந்தி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இரு தரப்பு சட்டத்தரணிகளும் முன்வைத்த வாதங்களை கருத்தில் கொண்ட நீதவான் வழக்கின் மேலதிக விசாரணைகளை ஜூன் மாதம் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்துள்ளார்.