எஹலியகொடை, பதுவத்தை பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பாட்டுள்ளார்.
இதற்கமைய கட்டிடப்பணியில் ஈடுபட்டிருந்த இருவரே இவ்வாறு மின்சார தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர், பிரதி காவற்துறைமா அதிபர் அஜீத் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கட்டிட நிர்மாணத்திற்காக கொண்டுவரப்பட்ட கொங்கிரீட் கலவை இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் இரத்தினபுரி ரதேசத்தை சேர்ந்த உயிரிழந்த இளைஞனின் சடலம் எஹலியகொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.