மினுவாங்கொட பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் 25 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவற்துறைமா அதிபர் அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார் .
அந்தவகையில் காவற்துறையினர் மினுவாங்கொடை பகுதியில் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
அதனடிப்படையில் பல்வேறு குற்றச் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக 25 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தமை தொடர்பிலே அதிகளவானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு காவற்துறையினரால் கைது செய்துள்ள 15 பேரிடம் இருந்து 91 லீட்டர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது .
இதனைத் தொடர்ந்து 7 சந்தேக நபர்களுக்கும் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் போதைப் பொருட்களை வைத்திருந்தமை , துப்பாக்கி வைத்திருந்தமை மற்றும் வேறு குற்றச் செயற்பாடுகள் தொடர்பில் தலா ஒருவர் வீதமும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மினுவாங்கொட காவற்துறையினர் சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .