குருநாகல் மாவட்டத்தின் மாவத்தகம பகுதியில் பயிர்களை அழித்துவரும் வெட்டுக் கிளிகள், தற்போது மாத்தறை மாவட்டத்திற்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாத்தறை மாவட்டம் பூருகம மற்றும் வலகந்த ஆகிய பிரதேசங்களில் உள்ள பயிர்ச் செய்கைகளை இத்தகைய வெட்டுக்கிளிகள் சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் வெட்டுக்கிளிகளை அழித்து பயிர்களை காப்பாற்றும் முயற்சிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது .