சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ முற்பட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவ மோர பகுதியில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர் என பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30 மற்றும் 35 வயதுடையவர்கள் எனவும், அவர்களிடமிருந்து மாணிக்கக்கல் அகழ்விற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்