T24 Tamil Media
இலங்கை

மாணவர்களுக்கான தொலைக்காட்சி அலைவரிசை ஆரம்பம்


நாட்டிலுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் ‘குருகெதர’ புதிய தொலைக்காட்சி அலைவரிசை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் கருத்திட்டத்திற்கு அமைவாக உயர் கல்வி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் பங்கேற்புடன் இலங்கை ரூபவாஹினி கூட்டுதாபனத்தின் ஊடக பங்களிப்புடன் இன்று (20) முதல் கற்றல் நடவடிக்கைகளில் மாணவர்களுக்கு இணைந்துக் கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரைக்கும், இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை கற்றல் நடவடிக்கைகளில் மாணவர்கள் இணைய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (21) பிற்பகல் 4 மணி முதல் கற்பித்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்பிரகாரம் உயர்தர கலை பிரிவிற்காக தமிழ், சிங்களம், அரசியல் விஞ்ஞானம், புவியியல் ஆகிய விடயதானங்களும் வணிக பிரிவிற்காக பொருளாதார விஞ்ஞானம், வணிகக்கல்வி, கணக்கியல் ஆகிய பாடங்களும் கணித மற்றும் விஞ்ஞான பிரிவுகளுக்கான பாடங்களும் கற்பிக்கப்படவுள்ளன.

அத்துடன் சாதாரண தர மாணவர்களுக்காக கணிதம், விஞ்ஞானம், தமிழ், சிங்களம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படவுள்ளது.

அனைத்து பாடங்களும் தமிழ் மற்றும் சிங்கள மொழிமூலமாக கற்பித்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. மேலும் இலங்கை பரிட்சை திணைக்களத்தின் நிபுணத்துவத்துவம் வாய்ந்தவர்களின் கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more