மாகாண சபை தேர்தலை தாமதப்படுத்தும் நோக்கிலேயே அரசாங்கம் தேர்தல் முறைமை தொடர்பில் ஆய்வு செய்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் மாகாண சபை தொடர்பில் அரசாங்கத்திற்கு பல தரப்பிலிருந்து அழுத்தங்கள் வழங்கப்படுவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.