T24 Tamil Media
இலங்கை

மஹிந்த தேசப்பிரிய கட்சித்தலைவர்களுடன் சந்திப்பு.

இலங்கையின் சில மாவட்டங்களில் ஊரடங்குச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நாளை கட்சி தலைவர்களை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியிகியுள்ளன.

குறித்த கட்சித்தலைவர்களுடனான சந்திப்பு நாளை காலை 10:30 க்கு நடைபெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா வைரஸின் பரவலையடுத்து ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக ஆராயும் நோக்கிலே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று விசேட சந்திப்பில் ஈடுபட்டவுள்ளார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தக் கூட்டத்துக்கு பொலிஸ் மற்றும் முப்படை உயர் அதிகாரிகளும், தேர்தல்கள் செயலக அதிகாரிகளும், பொதுநிர்வாக சேவை உயர் அதிகாரிகளும் அழைக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய நெருக்கடி நிலையைக் கவனத்தில்கொண்டு தேர்தலை நடத்த முடியாத நிலை காணப்படுவதால் இதற்கு எவ்வாறான மாற்று நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாக இதன்போது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிக்கவுள்ளார்.

இதேவேளை ஒத்திவைக்கப்பட்ட தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கே உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

ஜனாதிபதியால் நிர்ணயிக்கப்பட்ட திகதியில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த முடியாவிட்டால், தேர்தல்கள் ஆணைக்குழு பிறிதொரு திகதியை அறிவிக்கும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த சில தினங்களுக்கு முன்னர்தெரிவித்திருந்தார்.

அத்துடன் திகதியொன்றை நிர்ணயிக்காமல் தேர்தலை ஒத்திவைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியிருந்த நிலையில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more