கம்பஹா மாவட்டத்தின் தெல்கொட சிங்கிலி எனும் பிரதேசத்தில் மலசலக் குழி ஒன்றில் விழுந்து 14 வயது பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எம்பருலுவபகுதியிலுள்ள பாடசாலையில் 7ஆம் தரத்தில் கல்வி கற்கின்ற தக்சிலா தனுஷ் என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மலசலக்கூடத்தை மூடியிருந்த கொங்கறீட் மூடி திடீரென வெடித்ததால் இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகங்கவத்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.