மறைந்த ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு மரியாதையை செலுத்தும் நோக்கில் மன்னார் மாவட்டத்தில் பூரண கடையடைப்புடன் துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இதற்கமைய வீதிகள், வீடுகள் எங்கும் கருப்பு மற்றும் வெள்ளை நிறக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் மன்னார் மாவட்டம் சோக மயமாகக் காணப்படுகின்றது.
அத்துடன் மன்னர் மாவட்டத்திலுள்ள அனைத்து ர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதோடு,தனியார் போக்குவரத்து சேவைகளும் இடம்பெறவில்லை.
மேலும் வடக்கு கிழக்கு மற்றும் நாட்டின் ஏனைய பாகங்களில் இருந்தும் பொதுமக்கள், அரச அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், மதத் தலைவர்கள் என பல்லாயிரக் கணக்கான மக்கள் ஆயரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.