T24 Tamil Media
இலங்கை

மன்னார் பேருந்து நிலையம் நாளை திறப்பு.

மன்னாரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பேருந்து நிலைய கட்டடம், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நாளைய தினம் உத்தியோக பூர்வமாக மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்படவுள்ளதாக மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்துள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின், சுமார் 130 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் பஸார் பகுதியில் சகல வசதிகளுடன் பேருந்து நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது.

குறித்த பேருந்து நிலையம், நாளை மதியம் 1 மணியளவில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மன்னார் நகர சபையிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் நேற்று முன்தினம் மதியம், மன்னார் நகர சபையில் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் மன்னார் நகர சபையின் செயலாளர், உப தலைவர், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மன்னார் நகர சபையிடம் குறித்த பேருந்து நிலையம் கையளிக்கப்படும் நிலையில் பிரிதொரு தினத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு புதிய பஸ் நிலைய திறப்பு விழா நிகழ்வு இடம்பெற ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக உறுப்பினர்களுடன் கலந்துரையாடப்பட்டது என மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more