மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று நீக்கும் பணியில் ஈடுபடும்பணியாளர்களின் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மன்னார் நகர சபைப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சுத்திகரிப்புப் பணி மற்றும் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டபணியாளர்களுக்கு அத்தியவசிய மற்றும் உலர் உணவுப் பொருட்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
மன்னார் நகர சபை பிரிவுக்குட்பட்ட 60 பணியாளர்களுக்கு அவர்களுடைய குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள், மன்னார் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணையில் அதன் குழுத் தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் மன்னார் நகர சபை மண்டபத்தில் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்விற்கு மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டெவிட்சன், நகர சபையின் செயலாளர், உப தலைவர், நகர சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு குறித்த பணியாளருக்கான அத்தியாவசிய பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.
குறித்த பொதியில், அரிசி, சீனி, பருப்பு உட்பட சுமார் 2500 ரூபாய் பெறுமதியான உணவுப் பொருட்கள் 60 பணியாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.