இலங்கையில் கடந்த சில நாட்களாக முகக்கவசங்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையினால் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் ஒரு தொகுதி முகக்கவசங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.
லண்டன் என்பீல்ட் நாகபூசனி அம்மன் ஆலயத்தின் உதவியுடன் வவுனியா அந்தனர் ஒன்றியத்தின் அனுசரனையுடன் மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையினால் குறித்த ஒரு தொகுதி முகக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையினால் மன்னார் பாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் வைத்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் அவர்களிடம் இன்று ஒரு தொகுதி முகக்கவசம் மற்றும் கிருமி நீக்கி என்பன கையளிக்கப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வின் போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் போது மகத்தான பணியாற்றி வரும் மருத்துவ துறை சார் உத்தியோகத்தர்கள் அனைவரது நலன் வேண்டியும் உலக மக்களின் நலன் வேண்டியும் பிரார்த்தனை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
லண்டன் என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயத்தினால் இலங்கையின் பல பாகங்களிலும் பல்வேறுபட்ட உதவிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.