மதுபானம் மற்றும் சிகரட் பாவனையாளர்களுக்கு கொவிட் 19 தடுப்பூசிகள் வளங்க்கும் நடவடிக்கையானது நிதியை வீண் விரயம்ஆக்கும் செயட்பாடு என மதுசாரம் மற்றும் சிகரெட் தொடர்பான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது .
மதுசாரம் மற்றும் சிகரெட் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியர் சமதி ராஜபக்ஷ இதனை தெரிவித்தார். அத்துடன் சிகரெட் புகைப்பவர்கள் கொவிட் -19 நோயால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு
காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .
மேலும் கொவிட் -19 க்கு எதிரான தடுப்பூசி பெற்றவுடன் குறைந்தது ஆறு மாதங்களாவது ஒருவர் புகைபிடிப்பதையும் மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார் .