கடந்த சில நாட்களாக இலங்கையில் அனைத்து அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன.
கோவிட் -19 பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஊரடங்கு உத்தரவு இல்லாத காலத்தில் மதுபான விற்பனைக்கு மதுபான விற்பனை நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த காலப் பகுதியில் சட்டவிரோத மது விற்பனை மற்றும் சட்டவிதிகளை மீறி செயற்பட்ட 14000க்கும் மேற்பட்டோர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.