மட்டக்களப்பு விளாவட்டவானில் வீதியோரத்தில் இருந்த பனைமரங்கள் விசமிகளால் தீ வைத்து அழிக்கப்படுள்ளது.
மட்டக்களப்பு – கரவெட்டி வீதி, விளாவட்டவானில் வீதியோரத்தில் இருந்த இரண்டு பனைமரங்கள் இன்றிரவு விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வீதியால் சென்றுகொண்டிருந்த இரண்டு நபர்கள் பனைமரத்திற்கு தீ வைத்துவிட்டு ஒடியதாக அருகில் உள்ளவர்கள் கூறியதாக எமது பிராந்திய செய்தியாளர் மேலும் தெராவித்துள்ளார்.
பனை மரத்துடன் சேர்ந்து இருந்த ஆலைமரமும் இதனால் சேதமாகியுள்ளது.
இயற்கையாய் வளர்ந்து பயன்தரும் இவ்வாறான மரங்களை அழிக்கப்படுவது கண்டிக்கக்கூடிய விடயமே….