மட்டக்களப்பு நகரில் உள்ள பிரபல ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீப்பற்றியுள்ளது.
குறித்த வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த ஆடை விற்பனை நிலையத்தின் முதலாம் மாடியிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து தொடர்பாக மட்டக்களப்பு தீயணைக்கும் பிரிவுக்குக் கிடைத்த தகவலையடுத்து அப்பகுதிக்கு சென்ற மாநகர தீயணைக்கும் படையினர் தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, மட்டக்களப்பு காவல்த்துறை தலைமையகத்தில் உள்ள கலகம் அடக்குவதற்காக பயன்படுத்தப்படும் நீரடிக்கும் வாகனமும் கொண்டுவரப்பட்டு தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவனின் நேரடி கண்காணிப்பின் கீழ் மாநகரசபையின் தீயணைக்கும் படையினரின் அர்ப்பணிப்பான நடவடிக்கை காரணமாக தீப்பரவல் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்துத்தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.