உணவு ஒவ்வாமை காரணமாக சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
11 வயதான சிறுவனே உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த சிறுவனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
உணவு ஒவ்வாமை காரணமாக மேலும் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்திய சலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கல்லடி பகுதியை சேர்ந்த சிலரே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் மேலும் தெரிவித்துள்ளார்.