T24 Tamil Media
இலங்கை

மக்களை ஒடுக்கவே அவசர கால சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது-இம்ரான்.

மக்களை ஒடுக்கவே அவசர கால சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.

இந்நிலையில் அவசரகால சட்டம் தொடர்பான வாக்களிப்புக்கு பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

இந்த அரசை ஆட்சிக்கு கொண்டுவர உதவிய அரசின் நண்பர்களாலேயே சீனி அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தட்டுபாடு ஏற்பட்டு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இவர்களே சீனியை இலங்கைக்கு கொண்டுவந்தனர்.அரிசி விலையை தீர்மானிக்கின்றனர்.இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் மக்களுக்கு நிவாரணம் வழங்கமுடியும்.

ஆனால் நடவடிக்கை எடுக்கப்படுவதெல்லாம் அப்பாவி சில்லறை வியாபாரிகள் மீது.அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த இந்த சட்டம் கொண்டுவரப்படவில்லை என இதில் இருந்தே தெளிவாகிறது

குற்றவாளிகளை அருகில் வைத்துக்கொண்டு பொதுமக்களை அடக்கவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் பஞ்சத்தால் பொதுமக்கள் அனைவரும் வீதிக்கு இறங்குவார்கள் என்ற பயத்தில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்காரணமாகவே நாம் இச்சட்டத்தை நீக்கி அனர்த்த நிவாரண சட்டத்தின் மூலம் பெருந்தொற்றில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறுகிறோம் என தெரிவித்தார்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more