தற்போது சந்தையில் விஷம் கலந்த மிளகாய்த்தூள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன்படி உணவுகளை இறக்குமதி செய்யும் போது சுகாதார பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராயும் வேலைத்திட்டமொன்றை உடனடியாக அறிமுகப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் குறித்த கோரிக்கையினை அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமந்த ஆனந்த விடுத்துள்ளார்.
அத்துடன் உணவு இறக்குமதியின் போது, பால் மா மற்றும் காய்ந்த மிளகாய் இறக்குமதிகளின் போதும், இவ்வாறான சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன.
இதன்படி தற்போது நாட்டில் தேங்காய் எண்ணெய் இறக்குமதியிலும் இதேபோன்றதொரு பிரச்சினை எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.