T24 Tamil Media
இலங்கை

மக்களுக்கு செவிசாய்த்து அவசரகால சட்டத்தை வரையறை செய்துள்ளோம் – நீதியமைச்சர்

20 ஆவது அரசமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் நேற்று புதன்கிழமை காலை 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் ஆரம்பமாகியிருந்தது.

இதன்போது 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய நீதியமைச்சர் அலி சப்ரி, நாட்டு மக்களுக்கு செவிசாய்த்தே அவசரகால சட்டத்தை வரையறை செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

அரசமைப்பில் முன்வைக்கப்பட்டுள்ள மூன்றாவது மற்றும் ஐந்தாவது சரத்துத் தொடர்பில் சில யோசனைகளை முன்வைத்துள்ளதாகவும் அதன்படி சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலொன்றை நடத்துவதற்குத் தேவையான பின்னணியை ஜனாதிபதி தயாரித்தல் என்பதை உள்ளடக்கியுள்ளதாகவும் நீதியமைச்சர் தெரிவித்திருந்தார்.

அத்துடன் ஐந்தாவது சரத்தின் படி, ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் அவரால் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் தொடர்பாக நீதிமன்றத்தை நாட முடியும் என்ற பகுதியை தொடர்ந்தும் வைக்குமாறு உயர்நீதிமன்றம் கூறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள நீதியமைச்சர், அவசரகாலச் சட்டம் தொடர்பில் சிக்கல்கள் இல்லை என உயர்நீதிமன்றமும் கூறியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை அவசாரகால சட்டம் தொடர்பில் வெறும் சில சட்டங்களைக் கொண்டுவர முடியாது எனவும், உயர் நீதிமன்றத்தின் கருத்துக்கோடலுடன் மாத்திரமே அந்த சட்டத்தைக் கொண்டுவர முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவசர அனர்த்தங்களின் போதும், தேசிய பாதுகாப்புக்குத் தேவையான சந்தர்ப்பத்திலும் அதனைக் கொண்டுவர தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more