இலங்கையில் ஊரடங்கால் முடங்கியிருக்கும் யாழ்பாணத்தின் வறிய பிரதேச மக்களுக்கு யாழ்ப்பாணப் பல்லைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நிவாரணப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்றையதினம் தாெடர்ந்தும் 16 ஆவது நாளாகவும் மானிப்பாய் , மீசாலை கனகம் புளியடி , காெடிகாமம் , வரணி, அளவெட்டிபாேன்ற பிரதேசங்களில் வசிக்கும் 200 குடும்பங்களுக்கு மூன்றுநாட்களுக்குத் தேவையான ஒரு தாெகுதி உலருணவுப் பாெருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த உலர்உணவுப்பொதிகளுக்கான நிதி உதவியை வழங்கிய சாவகச்சேரி 1989ம் ஆண்டு பழைய மாணவர் சங்கத்தின் கனடா வாழ் உறுப்பினர்களால் வழங்கப்பட்டுள்ளது.
சுயலாபம் தேடும் சில அரசியல்வாதிகள் மத்தியில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் குறித்த செயற்பாடானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
