கண்டியில் போலி பெண் வைத்தியர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதற்கமைவாக பெண் வைத்தியர் ஒருவர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து 47 வயதுடைய போலி பெண் வைத்தியர் ஒருவர் கண்டி காவற்துறையினரால் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார் .
அத்துடன் குறித்த பெண் வைத்தியர் தனது பெயரில் போலி மருத்துவ பதிவு சான்றிதழைத் தயாரித்து கிளினிக் ஒன்றை திறந்து மருத்துவராக கடமையாற்றி வருவதாகமுறைப்பாடளித்துள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்படட பெண் குறித்த விசாரணைகள் நடைபெற்று வருவதாக பிரதிக் காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.