பேருவளை நகரில் வீதிச் சோதனையில் ஈடுபட்டு வந்த பொலிஸார் இரு மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி சோதனையிட்டபோது, அவற்றில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்துக் கொண்டு செல்லப்பட்ட சுமார் 1, 350 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் பயணித்த இரு மோட்டார் சைக்கிள்களும், மூன்று கைத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் 24, 32, 37 வயதான பேருவளை, வெலிப்பென்னை மற்றும் பிங்ஹேன பகுதியைச் சேர்ந்தவர்களாவர் என ஆரம்பம்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேருவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்