T24 Tamil Media
இலங்கை

போக்குவரத்து திணைக்களத்திற்கு 210 மில்லியன் ரூபா நட்டம்!

கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் புகையிரதம் மற்றும் பேருந்துகளில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளதால், போக்குவரத்துத் துறையின் அன்றாட வருமானம் 80 மில்லியனிலிருந்து 44 மில்லியனாக குறைவடைந்துள்ளதாக இலங்கை போக்குவரத்துத் துறையின் பிரதிப் பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இந்த மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் இன்று வரை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 210 மில்லியன் ரூபா நிதி நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, புகையிரத திணைக்களத்தின் அன்றாட வருமானம் 19 மில்லியனிலிருந்து 14 மில்லியனாக குறைவடைந்துள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளமையினால் தூர இடங்களுக்கான புகையிரத சேவைகளை இரத்துச் செய்ய நேர்ந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more